சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு- நாளை மறுதினம் அறுவை சிகிச்சை

சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு நேற்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்தது. இதன்காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நாளை மறுதினம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் இதனை தெரிவித்துள்ளார். சரத் பவாருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால் மறுஅறிவிப்பு வரும்வரை பொதுநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவரால் பிரசாரம் செய்ய முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: