அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மிக தீவிரமானது - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவு: சரத் பவார்

அமைச்சர் தனஞ்செய் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என சரத் பவார் கூறியுள்ளார்.

அமைச்சர் தனஞ்செய் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என சரத் பவார் கூறியுள்ளார்.

  • Share this:
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தனஞ்செய் பண்டிட்ராவ் முண்டே (வயது 45). மகாராஷ்டிர மாநிலத்தின் சமூகநீதித்துறையின் அமைச்சராக இருந்து வரும் தனஞ்செய் முண்டே மீது 37 வயதாகும் பெண் பாடகி ஒருவர், மும்பை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் அளித்த புகாரில், 2006ம் ஆண்டு முதலே அமைச்சர் தன்னை பல தடவை பாலியல் வன்புணர்வு செய்து வந்தார் எனவும் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மீதான பாலியல் புகார் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்கட்சியான பாஜக வலியுறுத்தி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர் தனஞ்செய் முண்டே தனது ஃபேஸ்புக்கில் விளக்கமளித்திருந்தார். அதில் புகார் தெரிவித்திருக்கும் பாடகியின் சகோதரியுடன் தான் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னை மிரட்டும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக முன்னதாகவே தான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் விளக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இது மிகவும் தீவிரமான புகார் எனவும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர் தனஞ்செய் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசிக்க தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: