பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தது ஷாஹீன் பாக்

பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தது ஷாஹீன் பாக்
ஷாஹீன்பாக், டெல்லி
  • News18 Tamil
  • Last Updated: February 14, 2020, 11:30 AM IST
  • Share this:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாஹீன்பாக்கில் போராடிவரும் பெண்கள், அன்பிற்கான இந்த நாளை தங்களுடன் செலவிட வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் குறைந்து வந்தாலும், தொடர்ந்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள், டெல்லி ஷாஹீன்பாக் பெண்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்காக போராடிவரும் அனைவரும் குறிப்பிடும் இடமாகவும், டெல்லி தேர்தலுக்கு முன்னதாக பல வகைகளில் அச்சுறுத்தலைச் சந்தித்த ஷாஹீன்பாக்கில் பெரும்பாலானாவர்கள் இஸ்லாமியப் பெண்கள். இதில் குழந்தைகள் முதல் 80 வயது பாட்டிகள் வரை அடக்கம்.
பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஷாஷீன்பாக்கின் அழைப்பிதழில், “அன்பிற்கான இந்த நாளை எங்களுடன் கொண்டாடுங்கள். அன்புப் பாடலை உங்களுக்காக பாடி ஆச்சரியம் அளிக்கக் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு ஷாஹீன்பாக் அழைப்புவிடுத்திருக்கும் இந்நிலையில், பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, “என் அலுவலகத்தில் நேரம் பெற்றால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து என்னுடன் பேசலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Also See...

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்