வீழ்ந்தாலும், விதையான மாவீரன் பகத் சிங் நினைவு தினம்!

வீழ்ந்தாலும் விதையாவது போல, பகத் சிங்கின் உயிரிழப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை மேலும் வளர்த்து, சுதந்திரத்தை பெற்று தந்தது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 1:22 PM IST
வீழ்ந்தாலும், விதையான மாவீரன் பகத் சிங் நினைவு தினம்!
பகத் சிங்
Web Desk | news18
Updated: March 23, 2019, 1:22 PM IST
இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுருவை தூக்கிலிட்ட தினம் இன்று.

இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி வைத்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர்.

செப்டம்பர் 28, 1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்த பகத் சிங், 23 மார்ச் 1931-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

24 வயது இளைஞரான பகத் சிங்கை கைது செய்த பிரிட்டிஷ் அரசு, 63 நாட்கள் சிறைத் தண்டனைக்கு பிறகு அந்த இளம் வீரரை தூக்கிலிட்டது.

சிறையில், இருக்கும் போது, இந்திய கைதிகளுக்கு சம உரிமை பெற, சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தையும் பகத் சிங் முன்னெடுத்து மக்கள் மனதில் பிரபலமானார்.

இந்தியாவின் சுதந்திரம் குறித்த கனவோடு போராடிய இளம் வீரர் பகத் சிங், சுதந்திர இந்தியாவை பார்க்கும் முன்னரே உயிர் துறந்தார்.

வீழ்ந்தாலும் விதையாவது போல, பகத் சிங்கின் உயிரிழப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை மேலும் வளர்த்து, சுதந்திரத்தை பெற்று தந்தது.
Loading...
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...