திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் அது அப்படி இல்லை, அது எங்களின் எதிர்பார்ப்புகளால் நடக்கிறது என்பது போல் ஓர் ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய மேட்ரிமோனியல் இணைய தளமான Shaadi.com என்ற தளம் 2.5 கோடி பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. திருமணத்திற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை எந்த அடிப்படையில் தேர்வு செய்கின்றனர் என்பதுதான் அந்த ஆய்வு.
இதில் அதிகப்படியான பெண்கள், ஆண்டிற்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் ஆண்கள் வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் பெரும்பாலான ஆண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வேலையைப் பொறுத்தவரை, அரசு வேலையில் இருக்கும் நபர்களையே பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். அதிக ஆண்கள், தனது துணைவி சட்டம் சார்ந்த வேலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பெண்கள், தனக்கு வரும் கணவர் சிவில் சர்வீஸ் பணிகளில் இருக்க வேண்டும் எதிர்பார்க்கின்றனர். அதிகப்படியாக விருப்பம் தெரிவிக்காத வேலை என்றால், அது விவசாயம் என்று ஆய்வு கூறுகிறது.
திருமண வயது :
இந்த ஆய்வின் தகவலில் படி, பெண்களைப் பொருத்தவரை திருமணத்திற்குத் தயாராகும் வயதாக 26ல் இருந்து 29 வயது வரை இருக்கிறது. ஆண்களுக்கு 26 வயது முதல் 29 வயது வரை இருக்கிறது. மேலும் தனக்கான சரியான துணையைத் தேர்வு செய்வதற்கு சில காலங்கள் எடுத்தாலும் அதற்குக் காத்திருக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் எதிர்பார்ப்புகள்:
அதிகப்படியான பெண்கள், தங்களுக்குக் கணவராக வர இருக்கும் நபர் சிவில் சர்வீஸ் பணியில் இருக்க வேண்டும் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து, அரசு வேலை தான் முதல் இடம் பிடித்துள்ளது. ஆண்டிற்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் ஆண்களையே அதிக பெண்கள் விரும்புகின்றனர். இதர பணிகள் என்றால், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை விரும்புகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்களின் எதிர்பார்ப்புகள்:
தான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்கள் வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்பது அதிகப்படியான ஆண்களின் விருப்பமாக இருக்கிறது. விமானம் மற்றும் கட்டிடக்கலை துறைகளில் வேலைப்பார்க்கும் பெண்களை அதிகம் ஆண்கள் திருமணத்திற்கு எதிர்பார்க்கின்றனர். மேலும் 17 சதவீதம் ஆண்கள், மனைவி வருடத்திற்கு ரூ.30 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆண்டிற்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் பெண்களுக்குக் குறைந்தளவு ஆண்களே விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வில் 1.6 மில்லியன் ஆண்கள் மற்றும் 0.9 மில்லியன் பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஆய்வில் முழுமையான தகவலின்படி, ஒரு டிகிரி பட்டம், பொருளாதார ரீதியாக யாரையும் சாராத தன்மை, அரசு வேலையில் இருப்பது, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதே திருமணத்திற்கு ஏற்ற தன்மைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Marriage Life, Marriage Plan, Matrimony