கணவர் கட்டாயப்படுத்தி மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!

மாதிரிப் படம்

18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது  பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது எனவே குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதாக சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்தது.

 • Share this:
  மனைவியின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்  ஒருவர் தனது கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி  அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இயற்கைக்கு முரணான வகையில் தன்னிடம் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

  இதையடுத்து பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான உடலுறவு, பெண்களுக்கு எதிரான கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் கணவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த வழக்கு  நீதிபதி என்.கே.சந்திரவன்சி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ’18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது  பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. இந்த வழக்கில்  சட்டப்பூர்வமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே கணவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது’ என்று நீதிபதி தெரிவித்தார்.

  இதையும் படிங்க: செலவுக்கு ரூ.50-க்கு மேல கேட்டால் கணவர் அடிக்கிறார் - போலீசில் ஜி.எஸ்.டி பெண் அதிகாரி புகார்


  மேலும் 376வது பிரிவின்  (பாலியல் பலாத்காரம்) கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிப்பதாகவும் நீதிபதி கூறினார். அதேவேளையில், இயற்கைக்கு முரணான வகையிலும், கொடுமைப்படுத்தியதாகவும்  குற்றச்சாட்டு பதியப்பட்டத்தில் தவறு எதுவும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

  இம்மாதத்தின் தொடக்கத்தில் இதேபோன்ற வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.  அதில், திருமணத்திற்கு பின்பு கணவரால் மனைவி அனுபவிக்கும் பாலியல் வன்முறை  விவகாரத்து கோருவதற்கு போதுமான காரணமாக உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

  மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது. மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே (Marital rape) ஆகும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தது.

  மேலும் படிக்க: கணவனால் வன்புணர்வுக்கு ஆளான மனைவி: நீதியை நிலைநாட்டிய கேரள நீதிமன்றம்!

  Published by:Murugesh M
  First published: