முகப்பு /செய்தி /இந்தியா / நீதிமன்ற வளாகத்திற்குள் இளம்பெண் ஆபாச நடனம்.. டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

நீதிமன்ற வளாகத்திற்குள் இளம்பெண் ஆபாச நடனம்.. டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

டெல்லியில் நீதிமன்ற வளாகத்திற்குள் இளம்பெண் ஆபாச நடனம் ஆடியதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடு முழுவதும் கடந்த வாரம் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் புதுடெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று இந்த ஹோலி மிலன் விழா நடைபெற்றது.

இந்த விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியது. இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கவனத்திற்கு வந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் முறையற்றது என்று குறிப்பிட்டுள்ளது.  மேலும் நீதிமன்ற அமைப்பு குறித்த எண்ணத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீர் குலைத்துவிடும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வழக்கறிஞர் அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கூட்டமைப்பு செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

First published:

Tags: Delhi High Court, Holi Celebration, Viral Video