ஊரடங்கு உத்தரவு: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்கள்: அரசு உதவிக்காக காத்திருப்பு

பாலியல் தொழிலாளர்கள்

 • Share this:
  ஊரடங்கு உத்தரவின் காரணமாக மும்பை சிகப்பு விளக்கு பகுதியிலுள்ள பாலியல் தொழிலாளிகள் உணவின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் கோடிக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மும்பையிலுள்ள சிகப்பு விளக்குப் பகுதி என்று அழைக்கப்படும் காமதிபுரா பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை தொழிலுக்குச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  தற்போது, சமூகச் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு என்ற தனியார் தொண்டு நிறுவனம் பாலியல் தொழிலாளர்களுக்கான உணவுகளை வழங்கிவருகிறது. இதுகுறித்து தெரிவித்த அந்த அமைப்பின் மேலாளர் அஜித் பன்ட்டேகர், ‘காமதிபுரா பகுதியிலுள்ளவர்களுக்கு நாங்கள் உணவுப் பொருள்களை வழங்கிவருகிறோம். நாங்கள், உணவுப் பொருள்களை வழங்காவிட்டால் அவர்கள் உயிர் பிழைத்திருப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடும்’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த பாலியல் தொழிலாளி ஒருவர், ‘அரசு சார்பில் எங்களுக்கு எந்த உணவுப் பொருள்களும் வழங்கப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனம் அளிக்கும் உணவுப் பொருள்களை மட்டும்தான் உண்டு வாழ்கிறோம்’ என்று தெரிவித்தார்.

  Also see:
  Published by:Karthick S
  First published: