Home /News /national /

அழகு நிலையத்தில் ரெய்டு.. விபச்சாரம் நடத்திய 5 பேர் கைது.. 4 இளம்பெண்கள் மீட்பு

அழகு நிலையத்தில் ரெய்டு.. விபச்சாரம் நடத்திய 5 பேர் கைது.. 4 இளம்பெண்கள் மீட்பு

புனே ஸ்பாவில் விபசார தொழில்

புனே ஸ்பாவில் விபசார தொழில்

போலீசாரால் மீட்கப்பட்ட பெண்கள் சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சலுன்கே விஹார் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள ஒரு ஸ்பா சென்டரில் விபசார தொழில் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.

    க்ரைம் பிரான்ச் துறையின் மூத்த காவல் ஆய்வாளர் ராஜேஷ் புரானிக், மஃப்டியில் தன்னை ஒரு கஸ்டமர் போல சம்பந்தப்பட்ட கோல்டன் டச் என்ற அழகு நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நோட்டமிட்டதில் விபசாரத்தொழில் நடைபெற்றது உறுதியானதை அடுத்து தனது டீமுக்கு தகவல் அளித்தார். அவர்கள் அங்கு விரைந்து நடத்திய ரெய்டில் ஐந்து பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் ஸ்பாவை நடத்திய மேலாளர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி மண்டல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமித் ஹோகண்டே ஆகிய இருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசும் எம்பி.. சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போன்ற சட்டவிரோத விபசார செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சொகுசு விடுதிகள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் இது போன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 593 பெண்களை மீட்டுள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 244 பெண்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் மீதியுள்ளவர்கள் வேறு மாநிலத்தவர்கள் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Prostitution, Pune Police

    அடுத்த செய்தி