வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோப்புப் படம்

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  குளிர்காலத்தின் தொடக்கமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் நிலவுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்.

  கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதாக டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் நிலவுவதால் அதிகாலையில் வாகனங்களை இயக்குவது பெரும் சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

  டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இந்த காலகட்டத்தில் வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாகும்.

  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா, மொரதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் பனிமூட்டத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  பீகார் மாநிலம் முசாபர்பூரில் நிலவும் பனிமூட்டத்தால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

  மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு...

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஸ்ரீநகரில், குறைந்தபட்சமாக மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: