Home /News /national /

நடு வழியில் நின்ற 2 ரோப்கார்கள் - இமாச்சலில் அந்தரத்தில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்

நடு வழியில் நின்ற 2 ரோப்கார்கள் - இமாச்சலில் அந்தரத்தில் சிக்கிய 11 சுற்றுலா பயணிகள்

இமாச்சலப் பிரதேசத்தில் அந்திரத்தில் பழுதடைந்த ரோப்வே கார்

இமாச்சலப் பிரதேசத்தில் அந்திரத்தில் பழுதடைந்த ரோப்வே கார்

மாவட்ட நிர்வாகம் அங்கு மீட்பு பணிகளை கவனித்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு களத்தில் இறங்கு உதவி செய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இரு ரோப்வே கார்கள் நடு வானில் சிக்கி நின்றதால் அதில் பயணித்த 11 பேர் அந்தரத்தில் சிக்கி தவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பர்வானு பகுதியில் டிம்பர் ட்ரெயல் என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் உள்ளது. இந்த பர்வானு பகுதியானது இமாச்சலப் பிரதேச மாநிலம் மட்டுமல்லாது ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு அருகாமையில் உள்ளது.

    இந்த சுற்றுலாத் தலத்தில் டிம்பர் ட்ரெயல் என்ற ரோப்வே கார் இன்று பயணத்தின் போது நடு வழியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றுவிட்டது. இந்த பிரச்னையால் இந்த ரோப்காரில் பயணித்த 11 சுற்றுலா பயணிகள் அந்தரத்தில் மாட்டித் தவித்தனர். இதில் நான்கு பெண்களும், இரண்டு மூத்த குடிமக்களும் அடக்கம்.

    இந்த சம்பவத்தை உடனடியாக அறிந்த மாவட்ட நிர்வாகம் மீட்பு படையினரை அழைத்து மீட்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற மீட்பு பணியில் ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்பு பணிகளை மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆய்வு செய்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ட்விட்டரில், 'பர்வானு டிம்பர் ட்ரெயல் பகுதியில் ரோப்கார் கோளாறு காரணமாக சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு நான் விரைந்துள்ளேன்.


    மாவட்ட நிர்வாகம் அங்கு மீட்பு பணிகளை கவனித்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு களத்தில் இறங்கு உதவி செய்து வருகிறது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள்' என்றுள்ளார்.

    இதையும் படிங்க: பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்காக பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு 

    கடந்த ஏப்ரல் மாதம் ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள திரிகூட் மலைப் பகுதியில் ரோப்கார் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் சிக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மீட்பு பணி சுமார்  40 மணி நேரம் நடைபெற்றது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Himachal Pradesh

    அடுத்த செய்தி