Home /News /national /

மசூதிகளில் சர்ச்சைக்குரிய பொருள்கள் வீச்சு.. அயோத்தியில் 7 பேர் கைது

மசூதிகளில் சர்ச்சைக்குரிய பொருள்கள் வீச்சு.. அயோத்தியில் 7 பேர் கைது

மசூதிகளில் சர்ச்சைக்குரிய பொருள்களை வீசிய குற்றத்தில் ஏழு பேரை கைது செய்த அயோத்தி காவல்துறை அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மசூதிகளில் சர்ச்சைக்குரிய பொருள்களை வீசிய குற்றத்தில் ஏழு பேரை கைது செய்த அயோத்தி காவல்துறை அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மசூதிகளில் சர்ச்சைக்குரிய பொருள்களை வீசிய குற்றத்தில் ஏழு பேரை கைது செய்த அயோத்தி காவல்துறை அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சில மசூதிகளில் அமைதி மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மசூதி வாசல்களில் சர்ச்சைக்குரிய பொருள்களை வீசியும், வன்முறையை தூண்டும் விதமாக போஸ்டர்களையும் ஒட்டியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதையடுத்து மகேஷ் குமார் மிஸ்ரா, பிரத்யுஷ் ஸ்ரீவத்சவா, நிதின் குமார், தீபக் குமார் கவுர், பிரிஜேஷ் பாண்டே, சத்ருகன் பிரஜாபதி, விமல் பாண்டே ஆகிய ஏழு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் ஏழு பேரும் அயோத்தியை சேர்ந்தவர்கள். இவர்கள் இஸ்லாமியர்கள் போல வேடமணிந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக அயோத்தி காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, "இந்த குற்றச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மசூதிகளில் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியும், பொருள்களை வீசியும் பிரச்னை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள நான்கு பேரை விரைவில் பிடிப்போம். இவர்கள் மீது கேங்க்ஸ்டார் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்பூரி பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு பதில் நடவடிக்கையாக இவர்கள் சதித்திட்டம் தீட்டி இக்காரியத்தில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி மகேஷ் குமார் எனவும், மற்றொரு குற்றவாளியான பிரிஜேஷ் பாண்டே வீட்டில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: மகனுக்காக ஜாமீன் வேண்டி வந்த பெண்ணை மசாஜ் செய்யச் சொன்ன பலே போலீஸ்

    இவர்கள் மீது ஏற்கனவே கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளது. மகேஷ் மீது நான்கு வழக்குகளும், நிதின் மற்றும் விமல் மீதும் காவல்துறை வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இந்து யோதா சங்டன் என்ற அமைப்பு ஒன்றை நடத்திவரும், தற்போது இவர்கள் மீது 295, 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் மத மோதல்களை ஏற்படுத்தும் குற்றத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சமீப காலமாக நாட்டில் மதமோதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராம நவமி, அனுமன் ஜெயந்தி, ரம்ஜான் ஆகிய பண்டிகை காலங்களில் மத ஊர்வலம் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளில் இரு தரப்புக்கு இடையே மோதல் நிகழும் சம்பவம் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ayodhya, UP police, Uttar pradesh

    அடுத்த செய்தி