ஹோம் /நியூஸ் /இந்தியா /

7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நான்கில் பாஜக வெற்றி! தெலுங்கானாவில் கடும் போட்டி

7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நான்கில் பாஜக வெற்றி! தெலுங்கானாவில் கடும் போட்டி

இடைத்தேர்தல் முடிவுகள்

இடைத்தேர்தல் முடிவுகள்

தெலங்கானா முனுகோட் (Munogode) வாக்கு எண்ணிக்கை பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவலின் படி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளர் 10309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Bye- Election Results: தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7  சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  உத்தரபிரதேசத்தின் கோக்ரநாத் (Gola Gokrannath) சட்டப்பேரவை இடைத்தேர்தலில்  பாஜக  வேட்பாளர் அமன் கிரி 34298 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் அரவிந்த் கிரி மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

  ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர் Bhavya Bishnoi தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 15740 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

  ஒடிசா தாம்நகர் (எஸ்சி) சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

  பீகாரில் மோகமா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் 16741 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். மேலும், கோபால் கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 1794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  தெலங்கானா முனுகோட் (Munogode) வாக்கு எண்ணிக்கை பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவலின் படி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளர் 10309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

  தெலுங்கானா இடைத்தேர்தல்

  மகாராஷ்ட்டிரா அந்தேரி கிழக்குத் தொகுதியில் உத்தவ் பிரலசாகேப் பிரிவைச் சேர்ந்த சிவசேனா வேட்பாளர்  முன்னிலை வகிக்கிறார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: BJP