எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு - வாக்கு எண்ணும் முறையில் மாற்றமில்லை

பிரச்சினைகள் நடந்த வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளையும், ஒப்புகைச்சீட்டுகளோடு ஒப்பிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

news18
Updated: May 22, 2019, 2:01 PM IST
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு - வாக்கு எண்ணும் முறையில் மாற்றமில்லை
தேர்தல் ஆணையம்
news18
Updated: May 22, 2019, 2:01 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டை முதலில் எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து ஐயங்களை எழுப்பி வரும் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள், அதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றை தேர்தல் ஆணையர்களிடம் நேற்று நேரில் வழங்கின.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும், பிரச்சினைகள் நடந்த வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளையும், ஒப்புகைச்சீட்டுகளோடு ஒப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இறுதியில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால், வாக்கு எண்ணும் பணியில் எந்த மாற்றமும் இருக்காது. அறிவிக்கப்பட்டபடி வாக்குகள் எண்ணப்படும்.

First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...