கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து.... 5 பேர் உயிரிழப்பு..?

கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து.... 5 பேர் உயிரிழப்பு..?

சீரம் நிறுவனத்தில் தீவிபத்து

வெடிசப்தத்துக்குப் பிறகு தீப்பறியதாகவும் அந்த இடத்தில் மருந்து தயாரிக்கும் பணி ஏதும் நடக்கவில்லை என்று சீரம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சிரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவிலுள்ள, சீரம் நிறுவனத்தின் முதல் முணையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கொரோனா தடுப்பு மருந்தான கோவீஷீல்டை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெடிசப்தத்துக்குப் பிறகு தீப்பறியதாகவும் அந்த இடத்தில் மருந்து தயாரிக்கும் பணி ஏதும் நடக்கவில்லை என்று சீரம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திடீர் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், தீவிபத்தில் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு குறித்தும் சீரம் நிறுவன அதிகாரிகள் மற்றும் புனே காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படை வீரர்களின் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


இந்த தீவிபத்தில் எந்த விதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று  சீரம் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தீவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.


Published by:Vijay R
First published: