2024-ம் ஆண்டுக்கு முன்னதாக உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காது - தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத் தலைவர்

உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா மருந்து உற்பத்தி செய்வதற்கு 2024-ம் ஆண்டுவரை ஆகும் என்று செரம் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கு முன்னதாக உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காது - தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத் தலைவர்
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 5:31 PM IST
  • Share this:
உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும், இதுவரையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 100 சதவீத வெற்றியை எட்டமுடியவில்லை. எப்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.

சர்வதேச அளவில் ஐந்து மருந்து நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் செரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், ஃபினான்சியல் டைம்ஸுக்கு செரம் நிறுனவத்தின் இந்தியத் தலைவர் அடர் பூனவல்லா பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், ‘ 2024-ம் ஆண்டுக்கு முன்னதாக உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. குறைந்த காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் அளவுக்கு மருந்து உற்பத்தியை மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்யவில்லை. இந்த உலகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். கொரோனாவுக்கு இரண்டு சொட்டு தடுப்பு மருந்து தேவைப்பட்டால், உலகம் முழுவதுக்கும் 15 பில்லியன் டோஸ் தேவைப்படும்.


தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதும், அதனை பகிர்ந்தளிப்பதும் முக்கியமானது. பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பணியை செரம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. 400 மில்லியன் டோஸ்களுக்கு அதிகமாக தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான செயல்திட்டத்தை நான் இதுவரையில் எழுத்துவடிவில் பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading