கோவிஷீல்ட் தடுப்பூசி விலை 2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை  2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு

கோவிஷீல்ட் தடுப்பூசி விலையை அரசுக்கு 2 மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருபுறம் வேகமெடுத்து வந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனிடையே கோவிஷீல்ட் விலையை 2 மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50சதவீதம் தடுப்பூசிகள் மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் விற்கப்படும் தடுப்பூசிகளின் விலை உயர்வை சுட்டிக்காட்டி இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ள சீரம் நிறுவனம், வரும் மே மாதம் முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

    கோடிக்கணக்கானோருக்கு முதல் டோஸ் கோவீஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீரம் நிறுவனம் விலையேற்றத்தை அறிவித்திருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Vijay R
    First published: