முகப்பு /செய்தி /இந்தியா / சாலையில் செல்லும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் 'சீரியல் கிஸ்ஸர்'..! - அதிர்ச்சி சம்பவம்..!

சாலையில் செல்லும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் 'சீரியல் கிஸ்ஸர்'..! - அதிர்ச்சி சம்பவம்..!

சிசிடிவி காட்சி..!

சிசிடிவி காட்சி..!

வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை சுவர் ஏறி குதித்து உள்ளார். அப்போது அந்த பெண் மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். திடீரென அந்த நபர் அவரை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம்கொடுத்து உள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த இளம்பெண் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்த மர்ம மனிதன் ஏன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நபரை எனக்குத் தெரியாது. மருத்துவமனை ஊழியர்களை அழைத்தேன் ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார் என கூறியுள்ளார்.

Read More : அதிக காற்று மாசடைந்த நகரங்கள் நிறைந்த இந்தியா… அதிர்ச்சி ரிப்போர்ட்..!

மேலும் எல்லைச் சுவர் மிகவும் குறுகியதாக உள்ளது.மருத்துவமனைக்கு அடிக்கடி வரும் பெண்களை முள்வேலி அமைத்து பாதுகாக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறி உள்ளார். சீரியல் கில்லர் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் இவர் சீரியல் கிஸ்ஸர். இதுபோல் அடிக்கடி பெண்களுக்கு முத்தம் கொடுப்பதாக புகார்கள் வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

First published:

Tags: India