தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு செப்டம்பர் 13-ல் தேர்தல்

இந்திய தேர்தல் ஆணையம்

மூன்றில் ஒரு இடத்திற்கு மட்டும் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் காலியாக காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

  தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், அவற்றுள் ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜானின் மறைவைத் தொடர்ந்து அந்த ஒரு இடத்தற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல், செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  அந்த தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - ஆகஸ்ட் 24
  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - ஆகஸ்ட் 31
  வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 1
  வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் - செப்டம்பர் 3
  தேர்தல் நடைபெறும் நாள் - செப்டம்பர் 13

  Must Read : அதிமுகவின் மூன்று இடங்களையும் கைப்பற்றுகிறது திமுக.... எப்படி தெரியுமா?

  தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: