ஹோம் /நியூஸ் /இந்தியா /

மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும்' - யோகி ஆதித்யநாத்

மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும்' - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

Yogi Adityanath : 'நமது பலமே நமது ஒற்றுமை தான்' - யோகி ஆதித்யநாத்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

   ‘நமது பலம், ஒற்றுமை. மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும். 135 கோடி மக்கள் ஒற்றுமையுடன் கூடிப்பேசும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா’ என உத்திரபிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  ககோரி புரட்சியை நினைவு கூறும் விதமாக நேற்றைய தினம் உத்திரபிரதேச மாநிலத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்திரபிரேதேச மாநில மக்களிடம் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அவர் பேசும் போது , இந்தியா மீண்டும் எந்த வகையிலும் வலுவிழந்து விடக்கூடாது என்பதே நமது மிகப்பெரிய தீர்மானமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​முழு நாடும் ‘அம்ரித் மஹோத்சவ் ’ நிகழ்ச்சியை காண்பது நம் அனைவரின் அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

  ALSO READ | சமூக வலைதளங்களில் டிபியாக தேசிய கொடியை பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

  மேலும் சாதி, மதம் , பிரதேசம் மற்றும் மொழியின் அடிப்படையில் நாம் பிளவுபடும்போது, ​​அது நமது பலத்தை பிளவுபடுத்துகிறது, இந்தியாவை பலவீனப்படுத்துகிறது, வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்கு நெருக்கடியை உருவாக்கும் சீர்குலைவு மற்றும் அராஜகத்தை உருவாக்குகிறது’ என தெரிவித்தார். கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் தலைமையில் ககோரி சம்பவம் நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Uttar pradesh, Yogi adityanath