சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில காவல்துறை DGP அனில் காந்த் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ சபரிமலை கோயிலில் கூட்ட நெரிசலை தடுக்க பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) கூடுதல் போலீசார் 18ம் படியில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு நிமிடத்தில் 80 பக்தர்கள் 18ம் படி ஏறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் நாட்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றவாறு முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதேபோல் பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்.
இதையும் படிங்க : எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன் இனங்களை சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்
மேலும், தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் தாமதமாகாமல் இருக்க, தரிசனம் முடித்த பக்தர்கள் மீண்டும் மேம்பாலம் வழியாக வெளியே செல்ல வசதி செய்து தரப்படும்” என கூறினார்.
மேலும் மாளிகைப்புறம், சன்னிதானம், பதினெட்டாம் படி ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், சன்னிதானத்தில் காவலர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் கேன்டீனை பார்வையிட்டார்.
பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரு, மேல்சாந்தி கே.ஜெயமோகன் நம்பூதிரி ஆகியோரையும் டிஜிபி சந்தித்தார். இந்த ஆய்வில் தென் மண்டல ஐஜி பி பிரகாஷ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆனந், பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஸ்வப்னில் மகாஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.