இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விஞ்ஞானி சோம்நாத் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
சோம்நாத் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குநராக உள்ளார். அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வாகன (பிஎஸ்எல்வி) ஒருங்கிணைப்புக்கான குழு தலைவராக இருந்தார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இன்றி ரேஷன் பொருள் வழுங்குக - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்ததுடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியிலும் சோம்நாத் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
Also read: கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு கொரோனா பாதிப்பு - பஞ்சாபில் பாஜகவுக்கு பின்னடைவு?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO