Home /News /national /

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா.. தேசிய அரசியலில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா.. தேசிய அரசியலில் பரபரப்பு

சோனியா, ராகுலுடன் குலாம் நபி ஆசாத்

சோனியா, ராகுலுடன் குலாம் நபி ஆசாத்

Ghulam Nabi Azad : காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படும் குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். இந்த நிகழ்வு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படும் குலாம் நபி ஆசாத் மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றம் குறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் குழுவில் குலாம் நபி ஆசாத்தும் இடம்பெற்றிருந்தார். ராஜ்யசபாவில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர் குலாம் நபி ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் பிரச்சாரக் குழு மற்றும் அரசியல் விவகாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட உடனடியாக அவர் அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது நினைவுகூறத்தக்கது.

    குலாம் நபி ஆசாத்தின் விலகல் காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்றாக உள்ளது.

    சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், 'காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படுதோல்வியைச் சந்தித்து விட்டன. இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சியை தள்ளப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் மாநில கட்சிகளிடமும் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை இழந்து வருகிறது. இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் தலைமையே காரணம்.

    பொறுப்புணர்வற்ற  தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த  நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் என்பது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான விஷயம். கட்சியில் பூத் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையால் தான் நியமிக்கப்படுகிறார்கள்.

    அவர்களை தொண்டர்கள் தேர்வு செய்வது இல்லை. அந்தவகையில் கட்சிக்குள் நடக்கும் மிகப் பெரும் மோசடிக்கு காங்கிரஸ் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைமைக்கு வருவதற்கா, முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Congress, Politics

    அடுத்த செய்தி