Home /News /national /

‘காங்கிரஸ் கட்சியின் படு தோல்விகளுக்கு ராகுல்தான் காரணம்’ – குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டு

‘காங்கிரஸ் கட்சியின் படு தோல்விகளுக்கு ராகுல்தான் காரணம்’ – குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டு

குலாம் நபி ஆசாத் - ராகுல் காந்தி

குலாம் நபி ஆசாத் - ராகுல் காந்தி

Ghulam Nabi Azad : காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படுதோல்வியை சந்தித்து விட்டன. இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சியை தள்ளப்பட்டுள்ளது. - குலாம் நபி ஆசாத்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2 மக்களவை தேர்தல் தோல்வி, மாநில தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாதது உள்பட காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம் என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பதாவது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2013 ஜனவரியில் ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். அன்று முதல், கட்சியில் முன்பிருந்த ஆலோசனை கூறும் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது.

    கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். அனுபவமில்லாத, உதவியாளர் நிலையில் இருக்கக்கூடியவர்கள் கட்சியை நடத்த தொடங்கினார்கள். ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற அரசியல் ஊடகங்களில் வெளிப்பட்டு விட்டது. 2014 ஆம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2 மக்களவை தேர்தலை எதிர்கொண்டு இரண்டிலுமே படுதோல்வி சந்தித்தது.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா.. தேசிய அரசியலில் பரபரப்பு

    காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படுதோல்வியைச் சந்தித்து விட்டன. இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சியை தள்ளப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் மாநில கட்சிகளிடமும் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை இழந்து வருகிறது. இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் தலைமையே காரணம்.

    பொறுப்புணர்வற்ற  தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த  நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் என்பது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான விஷயம். கட்சியில் பூத் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையால் தான் நியமிக்கப்படுகிறார்கள்.

    பெகாசஸ் வழக்கு விசாரணையில் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

    அவர்களை தொண்டர்கள் தேர்வு செய்வது இல்லை. அந்தவகையில் கட்சிக்குள் நடக்கும் மிகப் பெரும் மோசடிக்கு காங்கிரஸ் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைமைக்கு வருவதற்கா, முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    கட்சிக்காக எங்களது இளமை முழுவதையும், வாழ்நாள் முழுவதையும் நான் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். கட்சி எதற்காக தோல்வியை சந்தித்து வருகிறது என்பதற்கான காரணத்தை நான் குறிப்பிட்டு விட்டேன்.

    நாடு முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காங்கிரஸ் யாத்திரையை தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவற்றையெல்லாம் மிகுந்த வேதனையுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்றிலிருந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன்.

    இவ்வாறு சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்
    Published by:Musthak
    First published:

    Tags: Congress, Rahul gandhi

    அடுத்த செய்தி