“சுயமரியாதையை இழக்க முடியாது” - பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகல்

அடுத்தாண்டு ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 2 நிர்வாகிகளின் விலகல் பாஜகவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

“சுயமரியாதையை இழக்க முடியாது” - பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகல்
பாஜகவில் இருந்து விலகிய 2 நிர்வாகிகள்
  • News18
  • Last Updated: November 30, 2018, 4:14 PM IST
  • Share this:
மாநிலத்தின் மீதான நலனே முக்கியம், சீட்டுக்காக சுயமரியாதையை இழக்க முடியாது என்று கூறி பாஜகவில் இருந்து ஒடிசா எம்.எல்.ஏ உள்பட இருவர் விலகியுள்ளனர்.

அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் முயற்சி எடுத்துவருகிறது.

பாஜகவின் சார்பில் அம்மாநிலத்தின் பிரபல முகமாக இருக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் செய்யலாம் என்று அக்கட்சி திட்டமிட்டுவருகிறது.


மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்


இந்நிலையில், அக்கட்சிக்கு பலத்த பின்னடவை ஏற்படுத்தும் விதமாக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

ஆகிய இருவரும், “தேர்தல் டிக்கெட் கிடைக்காது என்ற பயத்தில் ஒடிசா நலன் சார்ந்த பல பிரச்னைகளில் மாநில பாஜக தலைவர்கள் பேசாமல் அமைதியாக உள்ளனர்” என்று கட்சியை விட்டு விலகிய பிஜோய் மஹாபத்ரா மற்றும் ரூர்கேலா எம்.எல்.ஏ திலிப் ராய் ஆகிய இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமித் ஷா.


பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு இருவரும் எழுதிய கடிதத்தில், “சுயமரியாதையுடன் 20 ஆண்டுகளாக ஒடிசாவில் அரசியல்வாதிகளாக இருக்கிறோம். இன்னும், எங்களை பொம்மைகளாக கட்சி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களைப் பொறுத்தவரை மாநில நலனே முக்கியமானது. தேர்தல் சீட்டுக்கும், கட்சிப் பதவிக்கும் ஆசைப்பட்டு மாநில நலனிலோ, எங்களின் சுய மரியாதையிலோ சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திலிப் ராய் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டேன் என்று கூறி அவர் சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Also See..

First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading