முகப்பு /செய்தி /இந்தியா / Jitin Prasada: நிரந்தர தலைவர் கோரி சோனியாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

Jitin Prasada: நிரந்தர தலைவர் கோரி சோனியாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

ஜிதின் பிரசாதா

ஜிதின் பிரசாதா

இன்று நாட்டின் நலன்களுக்காக ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவர் இருக்கிறார் என்றால் அது பாஜக மற்றும் பிரதமர் மோடி மட்டுமே” என ஜிதின் பிரசாதா கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காங்கிரஸின் மிகவும் மூத்த தலைவர்களுள் ஒருவரும், சோனியாவுக்கு கடிதம் எழுதி காங்கிரஸில் உட்கட்சி பூசலை வெளியுலகுக்கு வெட்டவெளிச்சமாக்கிய ஜி-23 குழுவில் இடம்பிடித்தவருமான ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்திருக்கிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதனையடுத்து முன்னாள் தலைவரான சோனியா காந்தி இடைக்கால தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கக்கோரி குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ராஜ் பாபர் உள்ளிட்ட 23 சீனியர் தலைவர்கள் கூட்டாக சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர்.

இந்த கடித விவகாரம் காங்கிரஸ் மட்டுமல்லாது அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனியர் காங்கிரஸ் தலைவர்களை உள்ளடக்கிய இந்த ஜி23 குழுவில் இடம்பிடித்தவர்களுள் ஒருவரான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதாவின் வருகை பாஜகவை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமை மற்றும் தொண்டர்களிடையே ஜிதின் பிரசாதாவின் விலகல் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:  இந்த பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? ஆயிரக்கணக்கில் சம்பாதிங்க!

பாஜகவில் இணைந்தது குறித்து ஜிதின் பிரசாதா கூறுகையில், “தேசத்தின் நலனுக்காக இன்று ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது பாஜக மட்டுமே. காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு 3 தலைமுறை தொடர்பு உள்ளது. எனவே ஆழ்ந்த யோசனைக்கு பின்னரே நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.

கடந்த கடந்த 8-10 ஆண்டுகளில், உண்மையான தேச நலன் சார்ந்த ஒரே கட்சி பாஜக மட்டுமே என்று நான் உணர்ந்தேன். பிற கட்சிகள் எல்லாம் மாநிலக் கட்சிகள், பாஜக மட்டுமே தேசிய கட்சி.

இன்று நாட்டின் நலன்களுக்காக ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவர் இருக்கிறார் என்றால் அது பாஜக மற்றும் பிரதமர் மோடி மட்டுமே” என ஜிதின் பிரசாதா கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜிதின் பிரசாதா, “மக்களின் நலன்களைப் பாதுகாக்கவோ அல்லது அவர்களுக்காக உழைக்கவோ முடியாத நிலையில் இருக்கும் ஒரு கட்சியில் இருப்பதில் என்ன பயன் என்று நான் நினைத்தேன். காங்கிரசில் என்னால் அதைச் செய்ய முடியவில்லை என்று உணர்ந்தேன்.

Also Read:   QS World University Ranking 2022: உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த 8 இந்திய பல்கலை எவை?

இத்தனை ஆண்டுகளில் என்னை வாழ்த்திய காங்கிரசில் உள்ளவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஆனால் இப்போது நான் ஒரு பிரத்யேக பாஜக ஊழியராக பணியாற்றுவேன் என ஜிதின் கூறினார்.

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பிறகு பாஜகவில் இணைந்த ராகுல் காந்திக்கு நெருக்கமான 2வது காங்கிரஸ் தலைவராக ஜிதின் பிரசாதா மாறியுள்ளார்.

First published:

Tags: BJP, Congress, JP Nadda, Rahul gandhi, Sonia Gandhi