முகப்பு /செய்தி /இந்தியா / நடுவானில் அரை நிர்வாணம்.. விமானத்தில் தகராறு செய்த பெண்.. கைது செய்த மும்பை போலீஸ்!

நடுவானில் அரை நிர்வாணம்.. விமானத்தில் தகராறு செய்த பெண்.. கைது செய்த மும்பை போலீஸ்!

விஸ்தாரா விமானம் (கோப்பு படம்)

விஸ்தாரா விமானம் (கோப்பு படம்)

தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் தகராறில் ஈடுபட்ட பெண்ணை மும்பை போலீசார் கைது செய்தனர். இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் அபுதாபியில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தொடர்ந்து விமானம் புறப்பட்டவுடன் அவர், தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு அவர்கள் மறுத்தபோது, மதுபோதையில் இருந்த பாவ்லோ விமான பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக அவர் விமானத்தில் சுற்றித்திரிந்தார்.

இதுகுறித்து விமானி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விமானம் தரையிறங்கியதும் மும்பை போலீசார் பாவ்லோ பெருசியோவை கைது செய்தனர். விமானங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் விமான பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Arrested, Mumbai Airport, Mumbai Police, Woman