Home /News /national /

விபரீத செல்ஃபி… 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபர்

விபரீத செல்ஃபி… 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபர் இறந்ததாக நினைத்த நிலையில் செல்போனில் அழைத்ததை தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கோகாக் நீர்வீழ்ச்சி குகையில் செல்ஃபி எடுக்க முயன்று தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

    கர்நாடக  மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கோகாக் நீர்வீழ்ச்சி உள்ளது. இதனை கர்நாடகத்தின் நயகாரா என அம்மாநில மக்கள் அழைக்கின்றனர். ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். அக்டோபர் 2-ம் தேதி மாலை பிரதீப் சாகர் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கோகாக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்துள்ளார். நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்த பிரதீப் அதனை செல்போனில் படம் பிடித்துள்ளார். அருவியில் மேல்பகுதிக்கு சென்று இயற்கை அழகை படம் பிடிக்க விரும்பி சென்றுள்ளார்.  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்த 140 அடி உயர குகைக்குள் பிரதீப் தவறி விழுந்தார்.

    Also Read:  IPL 2021: டெல்லியை பழித்தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக கோகாக் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் மீட்பு பணிகளை தொடரமுடியவில்லை. பிரதீப் இடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் அவர் இறந்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் கருதினர். இதன் காரணமாக மீட்புப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடர முடிவு செய்தனர்.

    இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் பிரதீப் தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாலை 3 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளை துரித்தப்படுத்தினர். 3.30 மணியில் இருந்து மீட்புப்பணிகளை தொடங்கினர்.

    Also Read: செல்போன் பேச்சு.. ஆத்திரத்தில் தங்கையை அடித்துக்கொன்ற அண்ணன்

    பிரதீப்-க்கு போன் செய்து அவரது லோகேஷனை ஷேர் செய்ய அறிவுறுத்தினர். காலை 5.30 மணிக்கு அவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  இரவு முழுவதும் தண்ணீர், உணவு எடுத்துக்கொள்ளாததால் அவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Falls, Karnataka, Selfie, Youths

    அடுத்த செய்தி