வாக்குப்பதிவு சதவிகித்தை அதிகரிக்க முதன் முறை வாக்காளர்கள் கைவிரலில் மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால், முதல் பரிசாக ரூ.7000 வழங்கப்படும் என்று மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான மிசோரமில் மொத்தம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர்.
படிக்க... பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்காக குதிரையில் சீறிய கேரள மாணவி!
கடந்த முறை மிகக்குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்ததால், வரும் தேர்தலில் அதனை அதிகரிக்க தேர்தல் துறை திட்டமிட்டது.
அதன்படி, தேர்தல் நாளான 11-ம் தேதி முதன் முறை வாக்காளர்கள் கைவிரலில் வாக்களித்த மையுடன் செல்பி எடுத்து, அதனை #mizoramelections என்ற ஹேஷ்டேக் உடன் இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டும்.
அல்லது, தேர்தல் ஆணையத்தின் வாட்ஸ் அப் நம்பருக்கு செல்பியை அனுப்ப வேண்டும். தேர்வாகும் முதல் செல்பிக்கு ரூ.7000 பரிசாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் செல்பிக்கு முறையே ரூ.3000 மற்றும் ரூ.2000 பரிசாகவும் வழங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
Also See...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்:
POINTS TABLE:
SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Mizoram Lok Sabha Elections 2019