செல்பி மோகத்தால் அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்த இளைஞர்
தெலுங்கானா மாநிலத்தில், அருவியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர், தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் அருவியில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.,

செல்பி பலி
- News18 Tamil
- Last Updated: August 6, 2020, 9:43 AM IST
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் லொத்தி அருவி உள்ளது. ஆண்டுதோறும் இங்கு குளிப்பதற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை மீறி இளைஞர்கள் அங்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு ஒரு இளைஞர் குழு ஞாயிற்றுக்கிழமை லொத்தி அருவிக்கு சென்றுள்ளளது. அந்த குழுவைச் சேர்ந்த 19 வயதான சச்சின் என்ற இளைஞர் அருவியின் மேல் பகுதியில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் கையில் இருந்த போன் தவறி அருவியில் விழுந்து விட்டது. அதிர்ச்சியடைந்த சச்சின் போன் தவறி விட்டதே என்ற நினைப்பில் செல்போனை எடுக்க குனிந்துள்ளார். அப்போது கால் வழுக்கி அருவியில் விழுந்தார். விழுந்த உடனேயே சிறிது நீச்சலடித்து சமாளித்த சச்சின், பின்னர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். மீட்புக் குழுவினருடன் களமிறங்கிய போலீசார் 2 நாட்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை சச்சினின் உடலை மீட்டனர்.
மேலும் படிக்க...பப்ஜி கேம் மோகம் - ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலைபின்னர் சச்சினின் உடல் உடற்கூறாய்வுக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவ்வாறு ஒரு இளைஞர் குழு ஞாயிற்றுக்கிழமை லொத்தி அருவிக்கு சென்றுள்ளளது. அந்த குழுவைச் சேர்ந்த 19 வயதான சச்சின் என்ற இளைஞர் அருவியின் மேல் பகுதியில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் கையில் இருந்த போன் தவறி அருவியில் விழுந்து விட்டது. அதிர்ச்சியடைந்த சச்சின் போன் தவறி விட்டதே என்ற நினைப்பில் செல்போனை எடுக்க குனிந்துள்ளார். அப்போது கால் வழுக்கி அருவியில் விழுந்தார்.
மேலும் படிக்க...பப்ஜி கேம் மோகம் - ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலைபின்னர் சச்சினின் உடல் உடற்கூறாய்வுக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.