ஹோம் /நியூஸ் /இந்தியா /

Pinarayi Vijayan : வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வு...’ கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சீமான் வாழ்த்து!

Pinarayi Vijayan : வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வு...’ கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சீமான் வாழ்த்து!

பினராயி விஜயன் - சீமான்

பினராயி விஜயன் - சீமான்

கேரள முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் பினராயி விஜயனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “கேரள முதலமைச்சராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஐயா பினராயி விஜயன் தலைமையிலான அரசு திறம்பட செயற்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஐயா பினராயி விஜயன் அவர்கள் முன்பைவிட மிகச்சிறப்பானதொரு நல்லாட்சியை வழங்கிட வாழ்த்துகிறேன்.

மேலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தனது புதிய அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா கே.இராதாகிருஷ்ணன் அவர்களை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரைவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் மைய மைதானத்தில் நடைபெற்றது. ஆளுநர் ஆரிப் முகமதுகான் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Must Read : கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்

அவரைத் தொடர்ந்து 20 அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். கேரள அமைச்சரவை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kerala CM Pinarayi Vijayan, Pinarayi vijayan, Seeman