• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோருக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோருக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின்வெற்றியை கொண்டாடியதாக காஷ்மீரில் சிலர் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேச விரோத சட்டத்தில் ( (Sedition law) வழக்கு பதிவு செய்யப்படும் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவோர் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில்  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    இந்த தோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி சரியாக பந்து வீசாததே காரணம் என்றும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் ஒரு சிலர் மத ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். சமிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், இந்தியாவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக பஞ்சாப் மாநிலத்தில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரில் சிலர் மீத் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!


    அக்டோபர் 24-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இந்திய அணிக்கு எதிராக சில சமூக விரோதிகள் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். தேச விரோதக் கருத்துகளால் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டது என்றும்m இது தொடர்பாக ஆக்ரா, பரேலி, புடான் மற்றும் சீதாபூர் ஆகிய பகுதிகளில் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும்  உத்தரப் பிரதேச போலீசார் ட்விட்டர் பக்கத்தில்  கூறியுள்ளனர்.


    இதையும் படிங்க: ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனை : மத்திய அரசு திட்டம்


    இதேபோல், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் தேச துரோக வழக்கை சந்திக்க நேரிடும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: