CAA-க்கு எதிராக நாடகம்... பள்ளி தலைமையாசிரியை மீது தேசத் துரோக வழக்கு: பிணை கோரிய மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு

CAA-க்கு எதிராக நாடகம்... பள்ளி தலைமையாசிரியை மீது தேசத் துரோக வழக்கு: பிணை கோரிய மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு
  • News18
  • Last Updated: February 12, 2020, 12:54 PM IST
  • Share this:
கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் இருக்கும் ஷாஹீன் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் அந்தப் பள்ளி மாணவியின் தாயார் மீதான தேச துரோக வழக்கில், அவர்களுக்குப் பிணை வழங்கக் கோரிய மனுவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

பிதார் மாவட்டத்திலுள்ள ஷாஹீன் பள்ளியில் கடந்த ஜனவரி 21 அன்று சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் பிரதமர் மோடியை அவமதித்ததாக ஒருவர் காவல்துறைக்குப் புகார் அளித்தார். அவருடைய புகாரின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் அதில் நடித்த 10 வயது சிறுமியின் தாயாரை ஜனவரி 30 அன்று தேச துரோகச் சட்டத்தின் கிழ் கர்நாடகக் காவல்துறை கைது செய்தது.

தற்போது பள்ளி தலைமை ஆசிரியை ஃபரீதா பேகமும் சிறுமியின் தாயார் நஜ்புநிஸாவும் பிதார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கக் கோரிய மனுவுக்கு பிதார் மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.


இதனிடையே, சிறுமிக்கு தந்தை, உறவினர்கள் என பாதுகாவலர்கள் யாரும் இல்லாததால் பள்ளிக்கூட விடுதியில் அவரைத் தங்கவைக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு குழந்தை நல வாரியம் கூறியுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி தெளசீஃப் மடிக்கேரி, ”அரசு தரப்பு வழக்கறிஞர் தன் ஆட்சேபனைகளை வழங்குவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டுக்கொண்டதால் நாங்கள் பிணை கோரி அளித்த மனு, ஒத்துவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் வெளிக்கொண்டுவர எங்களால் இயன்றவற்றைச் செய்து வருகிறோம்.”

மேலும், சிறுமி ஓர் ஆசிரியையுடன் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தாயார் இல்லாததால் அவருக்கு ஏற்படும் அச்சத்தையும் கவலையையும் போக்க அந்த ஆசிரியை கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் அவர் தெரித்தார்.முன்னதாக, அந்தப் பள்ளி சிறுவர், சிறுமிகளை சுமார் ஐந்து முறை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியது ஊடகங்களில் வெளிவந்ததும், அவர்களை விசாரிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also see:
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading