தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களோடு ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு!

சமாஜ்வாதி எம்.பி

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்தனர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக போராடினர். தற்போது தாலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர்.

  • Share this:
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்திருக்கும் ஆயுதக் குழுவான தாலிபான்களை, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ரஹ்மான் பர்க்-ற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் மீது தேசதுரோகம் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்தி வந்த உள்நாட்டு போர் என்பது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. 20 ஆண்டுகளால அமெரிக்க படைகளையும் அவர்கள் எதிர்த்து போரிட்டு வந்த நிலையில் தங்கள் நாட்டு படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது அமெரிக்கா. இதன் பின்னர் தாலிபான்களை எதிர்கொள்ள முடியாத ஆப்கன் அரசுப் படையினர் ஒவ்வொரு நகராக பின்வாங்கினர்.

Also Read: ‘உங்கள் தைரியத்துக்கும், உத்வேகத்திற்கும் சல்யூட்!’ – தாலிபான்களை பாராட்டிய இந்திய முஸ்லிம் அமைப்பு!

மின்னல் வேகத்தில் முன்னேறிய தாலிபான்கள் ஒரு சில நாட்களிலே அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி அதிர்ச்சி தந்தனர். பின் வாங்கி ஓடிய அரசுப் படைகள் இறுதியாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று காபுலையும் தாலிபான்களிடம் தாரை வார்த்தது. இதையடுத்து அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. உயிருக்கு பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றார் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி.

தாலிபான்களுக்கு பயந்து காபுலை விட்டு ஆப்கானிஸ்தானியர்கள் தங்களால் இயன்ற வகையில் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். அங்கு நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களில் தூதரக ஊழியர்களை மீட்டு சொந்த நாடுகளுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

Also Read:   ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் – கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

இந்நிலையில், தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களுடன் ஒப்பிட்டு சமாஜ்வாதி கட்சி எம்.பி ரஹ்மான் பர்க் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த திங்களன்று செய்தியாளர்களிடையே பேசிய எம்.பி ரஹ்மான் பர்க், “பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்தனர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக போராடினர். தற்போது தாலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலிமைமிக்க எந்த நாடும் தங்கள் நாட்டில் குடியேறவிடாமல் தாலிபான்கள் தடுத்திருக்கின்றனர்.” இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

Also Read:  மலையாள தாலிபான்கள் – சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

சமாஜ்வாதி எம்.பியின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் சமாஜ்வாதி எம்.பிக்கும் வித்தியாசம் கிடையாது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமாஜ்வாதி கட்சியினரால் என்ன வேணாலும் செய்ய முடிகிறது. அக்கட்சியில் தேசிய கீதமான ஜன கண மன பாட முடியாதவர்கள் உள்ளனர். சிலர் தாலிபான்களை பாராட்டுகின்றனர். தீவிரவாதிகளை பிடித்த போலீசார் மீது குற்றம் சொல்கின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்தார்.
Published by:Arun
First published: