இலங்கை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின் இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தொடர்ந்து எட்டு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தமிழகக் காவல்துறையினரும் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் தனுஷ்கோடி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் ரோந்துப் போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்தியா வழியாகத் தப்பிக்க வழி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்தியக் கடலோரங்களில் சந்தேகத்துக்கு உரிய அத்தனைக் கடல் வழிப் பாதைகளும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்பின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு மையங்கள் இருப்பதால் அப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.