முகப்பு /செய்தி /இந்தியா / நாளை 73-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை 73-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :

73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைக்க உள்ளார். இதையொட்டி, செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

காஷ்மீர்

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக குஜராத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்

குஜராத் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடலோர காவல் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பில் போலீசார்

சென்னை

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றிவைக்க உள்ளார். இதையொட்டி, தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ரோந்துப் பணி மற்றும் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை  விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையம் முழுவதும் தேசியக் கொடி வண்ணங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய் மூலம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் ராணுவத்தினர்

திருச்சி

விமான நிலையத்தில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே, விமான நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ரயிலில் பயணிகளின் உடமைகள் சோதிக்கப்படுகின்றன.

புதுச்சேரி எல்லைப் பகுதி, கடற்பகுதி ஆகியவற்றிலும் ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க... ப.சிதம்பரத்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Delhi, Independence day, Security guards