குருகிராம்: நீதிபதியின் மனைவி, மகனை சுட்டுவிட்டு போன் செய்த பாதுகாப்பு அதிகாரி!

குருகிராம்: நீதிபதியின் மனைவி, மகனை சுட்டுவிட்டு போன் செய்த பாதுகாப்பு அதிகாரி!
நீதிபதியின் மகனை காருக்குள் இழுத்துபோடும் மகிபால்.
  • News18
  • Last Updated: October 14, 2018, 12:33 PM IST
  • Share this:
ஹரியானாவின் குருகிராமில் நீதிபதியின் மனைவியையும், மகனையும் துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி, பிறகு அந்த நீதிபதிக்கு செல்போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குருகிராமில் உள்ள அர்காடியா சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காகக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் இருந்த அவர்களின் பாதுகாப்பு அதிகாரி மகிபால், அவருடைய துப்பாக்கியால் நீதிபதியின் மனைவியையும், மகனையும் நோக்கி சுட்டுவிட்டு தப்பித்தார்.

அப்போது நீதிபதியின் செல்போனுக்கு அழைத்து “உன் மகனையும், மனைவியையும் சுட்டுக் கொன்றுவிட்டேன்” என்று கொலை வெறியில் பேசியுள்ளார். பின்பு அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதிபதியின் மனைவி உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு போராடி வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் நீதிபதியும், அவரது குடும்பத்தாரும் மகிபாலை நடத்திய விதம் அவரை மனதளவில் பாத்திப்புள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்னால் விடுப்பு கேட்டு நீதிபதி மறுத்ததால், அந்த விரக்தியில் மகிபால் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகிபால் கடந்த ஒரு வருடமாக நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
First published: October 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading