ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராகுலின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு? காங்கிரஸ் கட்சி விளக்கம்!

ராகுலின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு? காங்கிரஸ் கட்சி விளக்கம்!

ராகுல் காந்தி - பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தி - பாரத் ஜோடோ யாத்திரை

Rahul Gandhi | பாதுகாப்பு வளையத்தை மீறி, தொண்டர் ஒருவர் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயற்சித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப்பில் நடைபயணத்தின் போது, தொண்டர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி, ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயற்சித்த நிலையில், அது பாதுகாப்பு குறைபாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்பின் ஹோசியார்பூர் தண்டா நகரில் இருந்து நடைபயணத்தில் ஈடுபட்ட ராகுலுடன், கட்சியின் மூத்த தலைவர்கள் அமரிந்தர் சிங் ராஜா வாரிங், ஹரிஷ் சவுத்ரி, ராஜ் குமார் சாபிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திரளான தொண்டர்களும், பொதுமக்களும் நடைபயணத்தில் பங்கேற்றிருந்த நிலையில், பாதுகாப்பு வளையத்தை மீறி, தொண்டர் ஒருவர் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட காவலர்கள், அந்த தொண்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சிறுது நேரத்தில் அவரை மீண்டும் அழைத்து, கைகுலுக்கி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், இது பாதுகாப்பு குறைபாடு என விவாதம் எழுந்த நிலையில், தொண்டர்களின் அன்பால் ஏற்பட்ட சிறிய பிரச்சனை என்றும், இதில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

First published:

Tags: Congress, Rahul gandhi, Security guards