முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

”பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது”

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

அப்போது திடீரென பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிரனரும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை சரணடையுமாறு இந்திய ராணுவ வீரர்கள் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published:

Tags: Jammu and Kashmir