திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பிரபல வைணவ கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஹாத்தி ராம்ஜி மடம். மிக பழைமையும் ,பாரம்பரியமும் கொண்ட இந்த மடத்திற்கு நாடுமுழுவதும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளது. திருப்பதியை தலைமையிடமாக கொண்டு இயங்கம் இந்த மடத்திற்கு அர்ஜுன் தாஸ் சாமிகள் தற்போது மடாதிபதியாக உள்ளார். பல கோயில் ஆபரணங்கள் மற்றும் நிலங்கள் இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் வருவதால் அவற்றில் மோசடி நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவந்தது.
இது தொடர்பான புகார் மடாதிபதி அர்ஜூன் தாஸ் சாமிகளுக்கு கவணத்திற்கு சென்றதும் நடக்கும் தவறுகள் தொடர்பாக விசாரித்ததாக தெரிகின்றது. மேலும் பல ஆண்டுகளாக திருப்பதியில் உள்ள ஹாத்திரம் பாவாஜி மடத்தின் காவலாளி பணியிலிருக்கும் பசவராஜ் என்பவரை மடாதிபதி அர்ஜுன் தாஸ் நேரில் விசாரித்துள்ளார். விசாரணையில் நீயும் மடத்தில் நடக்கும் திருட்டுக்கு உடந்தையா.. திருடியுள்ளாயா என்று கேட்டுள்ளதாக தெரிகின்றது.
இதனால் மனமுடந்தை பசவராஜ் நான் எந்த திருட்டு சம்பவத்திலும் ஈடுப்படவில்லை என்று சத்தம் போட்டு கத்தியுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த பசவராஜ் ஒரு கட்டத்தில் மடத்தின் உள்ளே கையில் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பசவராஜ் கழுத்தை அறுத்துக்கொண்டு மடத்தின் அங்கும் இங்கம் நடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
கழுத்தை அறுத்துக்கொண்டதால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதை தொடர்ந்து மடத்தின் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருப்பதி போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பசவராஜ் தற்கொலை முயற்சி பற்றி விசாரணை நடத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.