ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்வு... பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் இயங்கும்

News18 Tamil
Updated: August 9, 2019, 7:01 PM IST
ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்வு... பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் இயங்கும்
News18 Tamil
Updated: August 9, 2019, 7:01 PM IST
ஜம்முவில் 4 நாட்களாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில் தடை உத்தரவு தொடர்கிறது.

ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்த அறிவிப்புக்கு முன்பும் , பின்னரும் அதிகளவு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருந்தனர். இந்நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகள் சனிக்கிழமை வழக்கம் போல் இயங்கும்.


இதனிடையே, வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக கடும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு காஷ்மீரில் சில இடங்களில் தளர்த்தப்பட்டது. கத்துவா உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் இயங்கின. நிலைமை படிப்படியாக சீரடைந்து வந்தாலும், போராட்டங்களை ஒடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் டிராஜா மற்றும் சீத்தாராம் எச்சூரி ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு சற்று நேரம் அசாதாரண சூழல் நிலவியது.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...