Home /News /national /

கேரளாவில் தொடரும் பதற்றம்... பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..

கேரளாவில் தொடரும் பதற்றம்... பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..

பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

144 imposed in Palakkad : 24 மணி நேரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அதைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பை சேர்ந்த சுபைர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலமுரியில் ஆர்எஸ்எஸ் (RSS) முன்னாள் பிரமுகர் சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்த கொலையால் கேரளாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு  24 மணி நேரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு மற்றும் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் பதிவில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு விரைவில் தடை: எச்சரிக்கையாக இருங்கள்... பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ் (ஆடியோ)
 கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ள சூழலில், பெண்கள், குழந்தைகள் தவிர்த்து இருசக்கர வாகனங்களில் பாலக்காடு மாவட்டத்தில் பின் இருக்கையில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முகநூல் பதிவு மூலம்  தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.


மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அதைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணம் செய்யக் கூடாது என்ற   உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் தடை ஏப்ரல் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kerala

அடுத்த செய்தி