முகப்பு /செய்தி /இந்தியா / Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

மும்பையில் 144 தடை

மும்பையில் 144 தடை

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 7 பேரில் 4 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். மூன்றரை வயது குழந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தல் எதிரொலியாக  மும்பை நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் இத்தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதல்  பெங்களூருவில் இம்மாத தொடக்கத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்  17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

புதிதாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 7 பேரில் 4 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஒருவர் முதல் டோசை மட்டும் செலுத்தியுள்ளார். இன்னொருவர் எந்த தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. இதை தவிர்த்து மூன்றரை வயது குழந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் முகக்கவசம் அணிவது குறைந்துவிட்டது: எச்சரிக்கும் மத்திய அரசு!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,992 புதிய தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது. 9,265 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் மற்றும் 393 இறப்புகள் பதிவாகியுள்ளன.  தற்போது  சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 93,277 ஆக உள்ளது . கடந்த 559 நாட்களில்  இது மிகக் குறைவு என  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Mumbai