கோவா போற ப்ளான் இருக்கா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் ஜாக்கிரதை!

தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதாலே கடலோரப் பகுதியான வடக்கு கோவாவின் 144 விதிக்கப்பட்டுள்ளது.

கோவா போற ப்ளான் இருக்கா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் ஜாக்கிரதை!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 13, 2020, 7:01 PM IST
  • Share this:
கோவாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோவா பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 11-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரையில் அமலில் இருக்கும். இதுதொடர்பான உத்தரவை வடக்கு கோவா மாவட்ட நீதிபதி வெளியிட்டுள்ளார். தீவிரவாதத் தாக்குதல் அபாயம் இருப்பதாலே கடலோரப் பகுதியான வடக்கு கோவாவில் 144 விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவா முழுவதும் வீடு, கட்டடம், ஹோட்டல், லாட்ஜ், விருந்தினர் மாளிகை, பிஜி சேவை உள்ளிட்ட அனைத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்குவிடும் முன்னர் மிகுந்த கவன எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க: தோழிக்காக 1,177 கோடி ரூபாயில் வீடு வாங்கியிருக்கும் அமேசான் முதலாளி... மலைக்க வைக்கும் வசதிகள்..!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்