Home /News /national /

வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பீகார் கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பீகார் கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கடந்த 9-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 22-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
பீகார் மாநிலத்தை வாட்டி வதைத்து வரும் கடும் வெயிலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அறுபதைக் கடந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளதுடன், கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பல நகரங்களில் வெயில் கொளுத்துவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெயில் மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கடந்த 9-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 22-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெயில் கொடுமையை எதிர்கொள்ள முடியாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை அறுபதைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும் உயிரிழந்தனர்.

வெயிலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முசாபர்நகரில் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது.

கயா மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெயில் முடியும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Also see... EXCLUSIVE தமிழகத்தில் கடல்காற்று வீசாததே அதிக வெப்பத்திற்கு காரணம்: வெதர்மேன் பிரதீப் ஜான்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bihar, Death rate increased, Heat Wave, Summer

அடுத்த செய்தி