Home /News /national /

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு - சிவசேனா தொண்டர்கள் ஆவேசத்தால் அச்சம்

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு - சிவசேனா தொண்டர்கள் ஆவேசத்தால் அச்சம்

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு

ஏக்னாத் ஷிண்டேவின் எம்எல்ஏ அலுவலகத்தை சிவசேனா தொண்டர்களா தாக்கி சூறையாடியுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் விதமாக சிவசேனா கட்சியில் தற்போது உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னணி தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் புதன்கிழமை மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தியில் தங்கியுள்ளனர். அதேவேளை, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது சொந்த மக்களே தன் முதுகில் குத்தியுள்ளதாகக் கட்சி தொண்டர்களிடம் உருக்கமாகப் பேசியுள்ளார். அத்துடன் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் வேலையில் சிவசேனா தலைமை களமிறங்கியுள்ளது. அதேவேளை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் சிவசேனா தொண்டர்களும் களமிறங்கியுள்ளனர். ஏக்னாத் ஷிண்டேவின் எம்எல்ஏ அலுவலகத்தை சிவசேனா தொண்டர்களா தாக்கி சூறையாடியுள்ளனர்.

    இதையும் படிங்க: சிக்கலில் சிவசேனா.. மகாராஷ்டிராவில் என்ன தான் நடக்கிறது - முழு விவரம்

    அதேபோல், மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்ட சூழல் நிலவும் நிலையில் மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கைகளில் கட்டை, ஆயுதங்கள், போஸ்டர்கள், கொடும்பாவியை வைத்து கூட்டமாகவோ, ஊர்வலமோ செல்லக் கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Maharastra, Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி