Home /News /national /

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வெட்டிப் படுகொலை... பாஜக மீது குற்றச்சாட்டு

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வெட்டிப் படுகொலை... பாஜக மீது குற்றச்சாட்டு

ஷான் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில தலைவர் எம்.கே. பைஜி  குற்றம் சாட்டியுள்ளார்.

ஷான் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில தலைவர் எம்.கே. பைஜி குற்றம் சாட்டியுள்ளார்.

ஷான் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில தலைவர் எம்.கே. பைஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இதற்கு பாஜகவே காரணம் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆழப்புழா மாவட்டம் மன்னஞ்சேரி பகுதியில் நேற்றிரவு ஷான் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று, பைக்கை இடித்துள்ளது. இதில், ஷான் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், ஷானை சரமாரியாக வெட்டியுள்ளது.

    சுமார் 40 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    படுகாயத்துடன் அலறித் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சில மணிநேரம் உயிருக்கு போராடி ஷான் நள்ளிரவு 12.45-க்கு உயிரிழந்தார்.

    இதையும் படிங்க : இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 126 ஆக அதிகரிப்பு...

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில தலைவர் எம்.கே. பைஜி, ஷான் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மினி பஸ் டிரைவர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

    இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் எஸ்டிபிஐ போராட்டம் அறிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஆழப்புழா எஸ்.பி. ஜெயதேவ் மன்னஞ்சேரியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.

    இதையும் படிங்க : சென்னை : பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டூழியம்... பெண் பயணி மீதும் தாக்குதல்... கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

     

     
    Published by:Musthak
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Murder

    அடுத்த செய்தி