ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டு 22 நோயாளிகள் உயிரிழப்பு - குற்றவாளிகள் மீது வழக்கு பதிவுசெய்ய எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

ஆக்ரா மருத்துவமனை

இது திட்டமிட்ட படுகொலையே தவிர வேறொன்றும் கிடையாது. இதற்காக அந்த பராஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது இந்திய தண்டனை சட்டம் 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்கிறது எஸ்.டி.பி.ஐ. கட்சி.

 • Share this:
  உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பராஸ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட 22 நோயாளிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதுகுறித்து வெளியான சில அதிர்ச்சி தரும் தகவல்களில் இறந்த அந்த 22 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்றும், இந்த செயலை மருத்துவமனை நிர்வாகம் தான் செய்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது திட்டமிட்ட படுகொலையே தவிர வேறொன்றும் கிடையாது. இதற்காக அந்த பராஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது இந்திய தண்டனை சட்டம் 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான இந்த செயலை திட்டமிட்ட படுகொலையாக கருத வேண்டும். இந்த சம்பவம் நடந்தது கடந்த ஏப்ரல் 27 அன்றாகும்.

  இதுகுறித்து வெளியான ஒரு வீடியோ பதிவு ஒன்றில், பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரின்ஜெய் ஜெயின் என்பவர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இணைப்பை 5 நிமிடம் நிறுத்தி வைக்க சொல்லுகிறார். அதன்படி ஆக்சிஜன் இணைப்பு நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக 22 நோயாளிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் முழுவதும் நீல நிறமாக மாறி பின் சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக இறந்துபோனார்கள். ஆனால், இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாகத்தினர் யாரும் ஆக்சிஜன் இணைப்பு துண்டிப்பால் இறந்துபோகவில்லை என்று கூறிவருகிறது.

  இதுதான் இந்துத்துவ ஆட்சி மாடல் ஆகும். பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் மனித குலத்திற்கும், மனித மாண்பிற்கும் எதிரான ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான ஓர் மாதிரியை உலகிற்கு காட்டி வருகிறது. அதில் தற்போது பராஸ் மருத்துவமனை சம்பவமும் அடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்தோடு நின்றுவிடவில்லை. மாவட்ட மாஜிஸ்திரேட் கூட இந்த மரணங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கபட்டதினால் ஏற்படவில்லை என்று கூறுகிறது. இது உபியில் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. உபியின் அரசு இயந்திரம் முழுவதும் பாழ்படுத்தப்பட்டுவுள்ளது.

  ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் குணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்தவர்களுக்கு இது ஆச்சர்யமாக தெரியாது. காரணம் மனிதர்கள் மீதான கொடூரங்களை நாகரீக சமூகம் குற்றமாகவும், பாவமாகவும் கருதும். ஆனால் பாசிஸ்டுகள் அதனை நற்செயல்களாக பார்க்கின்றனர். சட்டத்தை பயன்படுத்தி நடத்தும் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கலவரம், கும்பலாக சென்று கொலை செய்வது, போலி என்கவுண்டர்கள் என்று உபி மாநிலம் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் கொலைக்களமாக மாறி வருகிறது. இதில் பராஸ் போன்ற புதிய கொலை யுக்திகள் சேர்க்கபடுகிறது.

  உபியில் மனிதத்திற்கும், மனித மாண்பிற்கும் எந்த மரியாதையும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியை தூக்கி வீசிவிட்டு சாதிய மனுவின் ஆட்சி அங்கு நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ். விரும்பும் கனவு தேசமான சாதிய இந்து ராஜ்ஜியம் உ.பி.யில் சிறிது சிறிதாக நிறைவேறி வருகிறது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சியம்.

  Must Read : ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி ஒத்திகை பார்த்த ஆக்ரா மருத்துவமனை: விசாரணை கோரும் சொந்தங்களை இழந்த உறவினர்கள்

  உபியில் மாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மனிதர்களுக்கு அளிக்கப்படவில்லை. மாட்டிற்கு யாரேனும் தீங்கு விளைவித்தால் அவர்கள் மீது உபியின் சட்டம் பாயும். தீங்கு விளைவித்தவர் கடுமையாக தண்டிக்கப்படுவார். இதுதான் உபியில் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. மனிதர்கள் மீது வன்முறையை நிகழ்த்துவோர் தண்டிக்கப்படாமல், அவர்களுக்கு அரசு உதவுவது பாதிக்கபட்டவர்களுக்கு மேலும் பிரச்சனையை அதிகரிக்கிறது. இதுதான் உ.பி.யை ஓர் கொலைக்களமாக ஆக்குகிறது.

  தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெறுவதினால் உ.பி. மாநிலம் அமைதியிழந்து உள்ளது. உபியில் நடக்கும் மனித விரோத செயல்களுக்கு மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும். குற்றம் செய்தவர்கள் கடுமையாக சட்டத்தின்படி தண்டிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: