• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வேலை நேரத்தில் மது குடித்த செக்யூரிட்டியை தட்டிக்கேட்ட குடியிருப்புவாசி கொலை..

வேலை நேரத்தில் மது குடித்த செக்யூரிட்டியை தட்டிக்கேட்ட குடியிருப்புவாசி கொலை..

Banglore

Banglore

பாஸ்கர் ரெட்டி தன் மீது நலச்சங்கத்தில் புகார் அளித்தது, மது போதையில் இருந்த காவலாளி பசந்த்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

  • Share this:
வேலை நேரத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர், குடியிருப்பு காவலாளியால் கொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் தலைநகரான பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளம். பெங்களூரு நகர் ஒரு கலாச்சார ஒருங்கிணைப்பு பகுதியாகவும் திகழ்கிறது. இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் மிகுதியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவின் ஹெச்.ஏ.எல் காவல் சரகத்துக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நகரை பரபரப்பாக்கி இருக்கிறது.

பெங்களூருவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளராக இருந்தவர் பாஸ்கர் ரெட்டி. இவருக்கு வயது 65. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர் பசந்த். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.

Also read: 2021 Maruti Celerio: ரூ.4.99 லட்சத்தில் அடுத்த தலைமுறை மாருதி செலரியோ.. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் அறிமுகம்

இந்நிலையில் நேற்று (நவம்பர் 10) அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியான பசந்த், வேலை நேரத்தில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டு உரிமையாளரான பாஸ்கர் ரெட்டி இதனை பார்த்து, பணி நேரத்தில் இப்படி மது குடிக்கக் கூடாது என கண்டித்துள்ளார். மேலும் காவலாளி பசந்த் பல முறை சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வேலை நேரத்தில் மது குடித்து வந்ததால், குடியிருப்பு நலச் சங்கத்தில் பசந்தின் நடவடிக்கை குறித்து புகார் அளித்துள்ளார்.

பாஸ்கர் ரெட்டி தன் மீது நலச்சங்கத்தில் புகார் அளித்தது, மது போதையில் இருந்த காவலாளி பசந்த்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று பாஸ்கர் ரெட்டி குடியிருப்பு வளாகத்தில் வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காவலாளி பசந்த் அங்கு வந்து பாஸ்கர் ரெட்டியை எதிர்பாராதவிதமாக தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தையும் அறுத்துள்ளார்.

Also read:  மழை விடுமுறை – ஆட்சியரின் உத்தரவை மதிக்காத தனியார் பள்ளி, கல்லூரிகள்

பாஸ்கர் ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து பாஸ்கர் ரெட்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பசந்த் தற்போது கைது செய்யப்பட்டு விசாரித்து வரப்படுகிறார். இந்த விவகாரம் பெங்களூருவில் பரபரப்பாக மாறியிருக்கிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: