ஹோம் /நியூஸ் /இந்தியா /

பள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

பள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

சீராய்வுக் கூட்டத்தில்  துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

சீராய்வுக் கூட்டத்தில்  துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

கோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளி- கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற 21-வது வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டத்தில்  துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், புதுச்சேரியில் இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு குழந்தைகளுக்கு  மகிழ்ச்சி தரும் வகையில் வண்ண சுவர் ஓவியங்களுடன் தயார் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது என்றார்.

கோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளி- கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.

முதல் தவணை தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவண.ணை தடுப்பூசிச்  செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவரகள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிச் செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்என்றும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.

Also Read:   ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்!

மூன்றாவது அலையை எதிர்கொள்ளவதற்கான அடிப்படைத் தயாரிப்புகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் கூறினார்.

இதனிடையே புதுச்சேரியில் மீண்டும் தடுப்பூசி திருவிழாவை சுகாதார துறை நடத்த இருக்கிறது.கொரோனா தடுப்பூசி இதுவரை 6,52,000 பேருக்கு போடப்பட்டுள்ளது. ஆக15 ம் தேதிக்குள் 100சதவித இலக்கை எட்ட 23,24ம் தேதிகளில் மீண்டும் தடுப்பூசி திருவிழா 100 மையங்களில் போடப்படுகிறது.

Also Read:  ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

இது குறித்து சுகாதார துறை செயலர் அருண் கூறுகையில்,வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 100% கொரோனா தடுப்பூசி  செலுத்திய  மாநிலமாக மாற்ற, கொரோனா நோய் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட  அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக  துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜனின் பரிந்துரைப்படி மீண்டும் தடுப்பூசி திருவிழாவை  சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இத்தடுப்பூசி திருவிழாவை சுகாதாரத்துறை மற்ற துறைகளுடன் இணைந்து ஜூலை 23 மற்றும் 24ம் தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இம்முறை தடுப்பூசி திருவிழாவில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்து கொரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலுமாக தடுப்பதே முக்கிய நோக்கமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி பற்றிய ஐயங்களை தீர்க்க புதுச்சேரியின் அனைத்து துறைகளும் சுகாதாரத் துறையுடன் இணைந்து குழுக்களை அமைத்து வீடு வீடாக சென்று தடுப்பூசியினால் விளையும் நன்மைகளை எடுத்துக்கூறி தடுப்பூசி போட ஊக்குவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Published by:Arun
First published:

Tags: Puducherry, School Reopen, Tamilisai Soundararajan